வனிதாவுக்கு இது தேவையா? அண்ணனுக்காக செய்த காரியம்! கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்
அண்ணன் அருண் விஜய்யின் 'யானை' படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வனிதா விஜயகுமார் பதிவிட்டுள்ளதை பார்த்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரம்மாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள படம் யானை.
யானை படம் வெளியாகி அனைவர் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில் வனிதா விஜயகுமார், தனது அண்ணன் அருண் விஜய்யின் யானை படத்துக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை வனிதாவின் தங்கை ப்ரீத்தாவின் கணவர் ஹரி இயக்கியிருக்கிறார்.
தன்னுடைய வாழ்த்தில், கடின உழைப்பும் விடாமுயற்சியும் ஒருபோதும் தோல்வியடையாது எனக் குறிப்பிட்டுள்ளார். வனிதாவிற்கு அவரது குடும்பத்திற்கும் இடையே சில மன கசப்புகள் உள்ளது.
இதனால் தனது குடும்பத்தினரை விட்டு விலகியிருக்கிறார் வனிதா.
Wishing team #Yaanai all the very best … hard work & persevarance never fails pic.twitter.com/jBW0d0tvSi
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 1, 2022
கிழித்து தொங்க விட்ட ரசிகர்கள்
இந்நிலையில் தற்போது வனிதா தனது அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதை இப்படியெல்லாம் செஞ்சாலும் உங்களை மறுபடியும் சேர்த்துக்க மாட்டாங்க என்று திட்டி கருத்து வெளியிட்டு வருகின்றனர்.