கையில் சுருட்டு... வாயில் புகை... மிரட்டும் வனிதா : ஷாக்கான ரசிகர்கள்
பழம் பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் தான் நடிகை வனிதா. இவர் பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இதனையடுத்து, குக் வித் கோமாளியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார். அதே சேனலில் சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் வந்தார். பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துகொண்டார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே அவரை விவகாரத்து செய்தார்.
இதன் பிறகு பிபி ஜோடி என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா, நடுவரான ரம்யாகிருஷ்ணனிடம் ஏற்பட்ட சண்டையில் அந்நிகழ்ச்சியிலிருந்து விலகினார். தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் வனிதா, 2கே காதல், காத்து, அநீதி, கடைசி தோட்டா உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
புகைப்பிடிக்கும் வனிதா
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் வனிதாவின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் கையில் சுருட்டு பிடித்துக் கொண்டிருக்கிறார். என்னா இது? என்று நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பார்க்கையில், அப்புகைப்படம் தற்போது நடிகை வனிதா நடித்துக்கொண்டிருக்கும் ‘கடைசி தோட்டா’ படத்தின் புகைப்படமாம்.
இப்படத்தை ஆர்.வி.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில், இயக்குநர் நவின் உருவாக்கி வருகிறார். இப்படத்தில், நடிகை வனிதா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம்.
மேலும், இப்படத்தில் ராதாரவி, ஸ்ரீகுமார், வையாபுரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கையில் சுருட்டுடன், புகைப்பிடிக்கும் நடிகை வனிதாவின் மிரட்டலான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |