பிரதீப் பிரச்சினைக்கு பின் முதல் முறையாக முகம் காட்டிய வனிதா.. எப்படி இருக்காரு பாருங்க
பிரதீப் பிரச்சினைக்கு பின் முதல் முறையாக வனிதா வெளியிட்ட புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய நடிப்பால் பல கோடி ரசிகர்களை வென்றவர் நடிகர் விஜயகுமார். இவரின் இரண்டாவது மனைவி நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா விஜயகுமார்.
இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” என்ற திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
இவரின் முதல் படத்திலே இவருக்கு பலத்த வரவேற்பு கிடைத்தாலும் இவர் சினிமா விட்டு விலகி திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தையும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.
பல சர்ச்சைகளுக்கு மத்தியில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாஸ் கொடுத்தார். ஆனால் இவரால் கடைசி வரை வர முடியவில்லை பாதியில் எலிமினேட் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு டைட்டில் வின்னர் அடித்தார். இப்படியாக அவ்வப்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் விடயங்கள் குறித்து விமர்சனம் செய்து வருகின்றார்.
எப்படி இருக்காரு பாருங்க..
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7 ஐ வழக்கம் போல விமர்சனம் செய்து கொண்டிருக்கும் வேளையில், பிரதீப்பின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்த தாக்குதலின் பின்னர் கண்ணாடி அணிந்து முகத்தை மறைத்து கொண்டிருந்த வனிதா அவரின் முகத்தை முதல் முறையாக வெளியில் காட்டியுள்ளார்.
புகைப்படத்தில் பார்க்கும் பொழுது பிரதீப்பின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட வனிதா தற்போது பூரண குணமடைந்து விட்டது போல் தெரிகிறது.
“ காலையில் வேலைக்கு கிளம்பும் போது எடுக்கப்பட்ட புகைப்படமா?” என வனிதா ரசிகர்கள் கருத்துக்கள் பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |