நடிகை வனிதாவின் இரண்டாவது மகளா இது? அழகில் அம்மாவையே மிஞ்சிட்டாரே
நடிகை வனிதா தனது இரண்டு மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கருத்துக்களை பெற்று வருகின்றது.
நடிகை வனிதா
தமிழ் திரையுலகில், மூன்று தலைமுறைகளாக நடித்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்தமகள் தான் நடிகை வனிதா.
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த இவர், பின்பு விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா திரைப்படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமானார்.
பின்பு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் அவரைப் பிரிந்தார். இதில் மகன் ஆகாஷிடமும், மகள் வனிதாவுடன் இருந்து வருகின்றனர்.
பின்பு இரண்டாவது திருமணம், ராபர்ட் மாஸ்டருடன் வாழ்க்கை, அடுத்து ஒரு திருமணம் என்று பல சர்ச்சைகளில் சிக்கிய இவர், பிரபல ரிவியில் ஒளிபரப்பாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதன்பின்பு குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், பிபி ஜோடியில் ரம்யாகிருஷ்ணனிடம் வாக்குவாதம் செய்துவிட்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
பீட்டர் பால் மரணம்
பின்பு கிராபிக்ஸ் டிசைனர் பீட்டர் பால் என்பவரை காதலித்து, கிறிஸ்தவராக மாறி அந்த முறைப்படியே திருமணம் செய்து கொண்டார். பின்பு சில மாதங்களே இவர்கள் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், அவரின் அதிக குடிபழக்கம் இருவருக்கும் இடையே பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியதோடு, இருவரும் பிரியவும் செய்துள்ளனர்.
சமீபத்தில் பீட்டர் பால் திடீர் மரணமடைந்தார். இவரது மரணத்திற்கு இந்நிலையில் தற்போது பீட்டர் பால் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு அதிக குடிபழக்கம் தான் காரணம் என்று கூறப்படுகின்றது.
மகளுடன் வெளியான புகைப்படம்
இந்நிலையில் வனிதா சமீபத்தில் தனது மகள்களுடன் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு சென்றுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ள நிலையில், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு இவரது இரண்டாவது மகள் வயதிற்கு வந்த நிலையில், அதன் பின்பு மகளை கண்ணில் காட்டாமலே வைத்திருந்த வனிதா தற்போது வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள், வனிதாவைப் போன்று அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.