மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனை கேவலமாக திட்டிய வனிதா விஜயகுமார்!!
பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் வனிதா நிற்கும் புகைப்படம் வைரலான நிலையில், அதற்கு கமெண்ட் செய்த லட்சுமி ராமகிருஷ்ணனை சரமாரியாக திட்டியுள்ளார் வனிதா.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார் வனிதா.
எனினும் சில வாரங்களிலேயே கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டார், அப்போது வனிதாவுக்கும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு கடுமையான விவாதம் நடந்தது.
மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை திட்டினார்.
இந்நிலையில் வனிதாவும் பவர் ஸ்டார் சீனிவாசனும் மாலையும் கழுத்துமாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
அது பிக்கப் ட்ராப் என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், பவர் ஸ்டார் இயக்கும் அந்தப் படத்தில் பவர் ஸடாருடன் சேர்ந்து நடிப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
ஆனால், இந்த புகைப்படத்தை ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டு வனிதா மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.
இந்த ட்வீட்டைப் பார்த்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சிரித்து சிரித்து கண்களில் தண்ணீர் வரும் எமோஜியை கமெண்டில் பதிவிட்டிருந்தார்.
மற்றொரு ட்வீட்டில், இது நகைச்சுவையாக இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் தயவு செய்து என்னை டேக் செய்ய வேண்டாம் எனவும் பதிவிட்டார்.
லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பின்னர் அந்த ட்வீட்களை நீக்கிவிட்டார்.
ஆனாலும் இதற்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா, அருவருப்பான, விஷமத்தனமான பெண்மணி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என் ரகசிய அபிமானியாகவும், தீவிர ரசிகராகவும் இருக்கிறார். என்னை துல்லியமாக பின் தொடர்கிறார்.
ஒரு காமெடி ஸ்கிரிட் எல்லோரும் சிரிப்பதற்காக உருவாக்கப்படுகிறது. பவர் ஸடார் நாம் ஏற்கனவே வென்றுவிட்டோம். என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.