யாருக்கும் நான் பயந்தவ இல்லை! விக்ரமனின் ஆதர்வாளர்களின் மூக்கை உடைத்த பிரபலம்.. என்ன சொன்னார் தெரியுமா?
நடிகை வனிதா விஜயகுமாருக்கு எதிராக கிளம்பிய மிரட்டலுக்கு அதிரடியாக பதிலடிக் கொடுத்துள்ளார்.
திருமண வாழ்க்கை
தமிழ் சினிமாவிலுள்ள டொப் நடிகர்களின் ஒருவரான விஜயகுமாரின் இரண்டாவது மணைவி நடிகை மஞ்சுளாவிற்கு பிறந்த மகள்களின் ஒருவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.
இவர் தமிழ் சினிமாவில் குறுகிய படங்கள் நடித்தாலும், மக்கள் மனதில் சில சர்ச்சையான சம்பவங்களில் மாட்டியதால் இன்று வரை நிலைத்து நிற்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி
இதனை தொடர்ந்து கொரோனா காலங்களில் பீட்டர் போல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு பல இன்னல்களுக்கு முகங்கொடுத்தார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மறுபடியும் பிரபல்யமானார். தொடர்ந்து தற்போது youtube சேனல், துணி கடை என செம பிசியாக இருந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து தற்போது பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகச் சென்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 ஷோ மீது பல விமர்சனங்களை கூறி வருகிறார்.
விமர்சித்து சிக்கலில் மாட்டிய வனிதா
இதன்படி, சமிபத்தில் விக்ரமனுக்கு அரசியல் சார்பாக ஆதரவு எழுவதாக பிரபல அரசியல் வாதி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனால் கடுப்பான வனிதா “அரசியலை entertainmentல் புகுத்தாதீங்க” கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் வனிதா இவ்வாறு கூறியதும் பல மிரட்டல்கள் ந்ததாக வனிதா புகார் கூறி இருக்கிறார்.
அந்த மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வனிதா இன்ஸ்டா பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "யாருக்கும் எதுக்கும் பயந்தவ நான் இல்லை. உங்க அரசியல் புத்தி என்னனு காலம் காலமாக பாத்திருக்கோம்." "உங்க அரசியல் எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க" என குறிப்பிட்டு வனிதா பதிலடி கொடுத்து இருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் வனிதாவிற்கு ஆதவளிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.