பெயரை வீணாக்கினாரா விசித்திரா.. அப்பட்டமாக பலி சுமத்தும் வனிதா- ஷாக்கில் இணையவாசிகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விசித்திரா வெளியேற்றப்பட்டது சரி தான் என வனிதா பேசியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 96 வது நாளை நெருங்கி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன்,விக்ரம், மாயா , விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் ஆகிய உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுவரையில் இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, பூர்ணிமா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
அதிலும் கடந்த வாரம் முக்கிய போட்டியாளரான விசித்திரா வெளியேறியுள்ளார்.

வீண் பலி சொல்லும் வனிதா
இந்த நிலையில் விசித்திரா வெளியேற்றப்பட்ட சரி தான் என நடிகை வனிதா பேசியது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, “ நாம் எதிர்பார்த்தது போல் விசித்திரா வெளியேற்றப்பட்டிருக்கிறார். பிக்பாஸ் எவிக்ஷன் எப்படி நடைபெறுகின்றது. எதன் அடிப்படையில் பிரபலங்களின் வெளியேற்றப்படுகிறார்கள் என எனக்கும் குழப்பமாக இருக்கின்றது.
எவிக்ஷன் ஓட்டுக்கள் அடிப்படையில் அல்லாமல் சேனலின் தீர்மானத்தின் அடிப்படையிலும் தான் வெளியேற்றுகிறார்கள்.

இதன்படி, பூர்ணிமா 16 இலட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியது சரியான முடிவு.
அதே போல் அர்ச்சனாவிற்காக ஒருவர் பிஆர் குழுவில் ஒருவர் வேலை செய்கிறார். அர்ச்சனா நல்லவர் போல் வெளியில் காட்டிக் கொண்டிருக்கிறார்.
இப்படியொரு நிலையில் விசித்திரா வெளியேற்றப்பட்டது நல்ல விடயம். இவ்வளவு நாள் சம்பாரித்த புகழையும் பெயரையும் கடந்த ஒரே வாரத்தில் இல்லாமலாக்கிக் கொண்டார். இப்படியான நிலையில், விசித்திரா எவிக்ஷன் செய்யப்பட்டது மக்களுக்கு பிக்பாஸ் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் விசித்ரா வெளியேற்றப்பட்டதை நான் ஒரு நியாயமான விடயமாக பார்க்கிறேன். ஏனென்றால் அவர் உண்மையில் மக்களை ஏமாற்றினார்.” என பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், “ வனிதா- விசித்திராவிற்கு அப்படி என்ன பிரச்சினை..?” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |