என்னை தாக்கியவர்களுக்கு செருப்படி கொடுக்க தான் இதை செய்தேன்- வனிதா விஜயகுமார்
சமீபதத்தில் வனிதா விஜயகுமாரை மர்ம நபர் ஒருவர் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வனிதா விஜயகுமார்
அண்மையில் வனிதா விஜயகுமாரை மர்ம நபர் ஒருவர் தாக்கி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சம்பவம் குறித்து பேசிய வனிதா ''இரவில் தாக்கிய நபரை அடையாளம் தெரியவில்லை என்றும், ரெட் கார்டா கொடுக்கிறீங்க'' என்று கூறி தாக்கியதாக கூறினார்.
இந்நிலையில் பிரதீப்பின் ஆதரவாளர் யாரோதான் தாக்கியதாக கூறப்பட்டது.
அவர் கூறியதாவது..
இதுகுறித்து பேசியுள்ள வனிதா, 'தெலுங்கு பிக்பாஸில் பல்லவி பிரசாந்த் வின்னரானார். அதனை தொடர்ந்து அமர்தீப் ரன்னராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் பல்லவி பிரசாத்தின் ரசிகர்கள் அமர்தீப் காரை அடித்து உடைத்தனர்.
ஆனால் இதை பற்றி பேசிய தமிழ் ரசிகர்கள், நல்ல வேளையாக இந்த மாதிரி எங்கள் ஊரில் நடக்கவில்லை என கமெண்ட் பதிவிட்டுள்ளார்.
அங்கு காரைத்தான் உடைத்தார்கள், ஆனால் இங்கு என் முகத்தையே உடைத்துவிட்டார்கள். இதை மட்டும் நம்ப மறுக்கின்றனர். காரணம் இதை வனிதா சொன்னதால்தான்.
அவரை யார் அடிப்பார்? அவர் கீழே விழுந்திருப்பர் என கூறுகிறார்கள். நான் உண்மையிலேயே கீழே விழுந்திருந்தால் தலையில் தான் அடிபட்டிருந்து கட்டு போட்டிருப்பேன். ஆனால் கண்ணில் இவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டிருக்காது.
நான் தாக்கப்பட்டு ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இன்னும் நான் கண்ணாடி போட்டுகொண்டு தான் சுற்றுகிறேன். புது வருடத்தில் எல்லாம் சரியாகிவிட்டு மீண்டும் பழைய வனிதாவாக வருவேன்.
இந்த ஒரு மாதம் நான் தொடர்ச்சியாக பிக் பாஸ் குறித்து விமர்சனம் செய்தது, வெளியே பயணம் செய்தது உள்ளிட்டவை தான் என்னை தாக்கியவர்களுக்கு நான் கொடுத்த செருப்படி.
என்னை எதுவும் தடுக்க முடியாது என்று சொல்வதற்காகவே நான் இப்படி செய்கிறேன். நான் எங்கேயும் சோர்ந்து படுக்கவில்லை, படுக்கவும் மாட்டேன். என்னை யாராலும் உடைக்க முடியாது.
தெலுங்கில் உள்ளது போலவே வன்மம் நம் ஊரிலும் இருக்கிறது. இப்போது இருக்கக்கூடிய போட்டியாளர்களுக்கு சமூக வலைத்தளங்களில் மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் உள்ளிட்டவை வந்துகொண்டே இருக்கின்றன'' என்று பேசினார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |