தொகுப்பாளினி பிரியங்காவை எட்டி உதைத்த வனிதா! சர்ச்சையைப் எழுப்பிய காட்சி
தொகுப்பாளினி பிரியங்காவை நடிகை வனிதா எட்டி உதைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொகுப்பாளினி பிரியங்கா
பிரபல ரிவியில் தொகுப்பாளினியாக பல ஆண்டுகள் பணியாற்றி வரும் பிரியங்கா மக்களுக்கு பிடித்த தொகுப்பாளினியாக வலம் வருகின்றார்.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுத்து வழங்கி முன்னணி விஜேவாக திகழ்ந்து வரும் இவர் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் பல நிகழ்ச்சிகளை சோலோ தொகுப்பாளராக இருந்து தொகுத்து வழங்கும் இவர், சமீபத்தில் ஆரம்பித்த ஸ்டார் மியூ்சிக் சீசன் 4ல் தொகுத்து வழங்குகின்றார்.
புதுவித விளையாட்டுடம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் வனிதா உட்பட சிலர் கலந்து கொண்டுள்ளனர். அப்பொழுது பாட்டு பாட வந்த வனிதாவை வத்திக்குச்சி வனிதா பாட வராங்க என்று காமெடியாக கலாய்த்த பிரியங்காவை எட்டி உதைத்துள்ளார்.
வனிதாவின் இந்த மோசமான செயலைக் கண்ட பிரியங்காவின் ரசிகர்கள் கலாய்த்தும், திட்டித் தீர்த்தும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |