வனிதா வெளியிட்ட ஒற்றை புகைப்படம்: எதற்காக இந்த பொழப்பு? நீங்களாச்சும் டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
வனிதா தனது தந்தை படத்திற்கு முன்னே நின்று தனது புகைப்படத்தினை வெளியிட்டு கொடுத்துள்ள கேப்ஷனை ரசிகர்கள் பயங்கரமாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் சற்று நற்பெயர் பெற்ற வனிதா அதன் பின்பு பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றார்.
எந்தவொரு சவாலாக இருந்தாலும் நேருக்கு நேர் மோதி சமாளித்து வரும் இவர், சமீபத்தில் பவர்ஸ்டார் உடன் நடிக்கும் படத்தின் புகைப்படத்தினை வெளியிட்டார்.
இதனை அவதானித்த ரசிகர்கள் அடுத்த திருமணமா என்று கேட்டு கலாய்த்து எடுத்ததற்கு தக்க பதிலடியும் வனிதா கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது தந்தையின் புகைப்படத்திற்கு முன்பு நின்று கொண்டு, அப்பாவை போன்றே மகளும்... டிஎன்ஏ என்று கேப்ஷனைக் கொடுத்துள்ளார்.
இதற்கு ரசிகர்கள் சரமாரியாக தங்களது கருத்தினை பதிவிட்டுள்ளனர். எதற்காக இந்த பொழப்பு? நடிகர் விஜயகுமார் பெயரை ஏன் கெடுக்குறீங்க? நீங்களாச்சும் டிஎன்ஏ டெஸ்ட் எடுங்க... அப்படியே பாரதி கண்ணம்மா வை என்கரேஜ் பண்ணுங்க என்று சரமாரியாக கருத்தினை பதிவு செய்துள்ளனர்.