என் நிலைமை யாருக்கும் வரக்கூடாது.. பல நாட்களாக அடக்கி வைத்திருந்த வனிதா- எமோஷனல் பேட்டி
விஜய் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களமிறங்கும் நிலையில் இவர் குறித்து வனிதா பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஹீரோவாகும் வனிதா மகன்
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கி வரும், “Mambo” படத்தில் வனிதாவின் மகனான விஜய் ஸ்ரீஹரி நடித்து வருகிறார்.
விஜய் ஸ்ரீஹரிக்கு ஜோடியாக பிரபு சாலமனின் மகள் - ஹேசல் சைனி நடிக்கிறார்.
சிங்கத்தை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.
புலம்பும் வனிதா
இதனை தொடர்ந்து வனிதாவின் புலம்பல்களும் ஆரம்பித்து விட்டன.
இது குறித்து பேசிய வனிதா, “ இது ரொம்ப மோசமான நிலைமை என்றாலும் ஒரு அம்மாவாக பெருமைப்படுகிறேன். என் மகன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் பொழுது, நானும் படங்களில் ஹீரோயினாக நடிக்கிறேன். இது போன்ற ஒரு வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.
மாறாக என்னுடைய அம்மாவிற்கு கூட கிடைக்கவில்லை. என் மகனின் கண்கள் பார்ப்பதற்கு என்னுடைய கண்கள் போல் இருக்கிறது. அருண் அண்ணாவின் சாயல் இருக்கிறது.
நேரில் பார்த்தால் பேச வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும்....” என கவலையுடன் பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |