தேவயானி மகளும் என் மகளும் ஒன்னா?.. வனிதாவின் பரபரப்பு பேச்சு
நடிகை வனிதா தேவயானி மகளுடன் தனது மகளை இணைத்து வைத்து பேசாதீர்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை வனிதா
நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மகளான வனிதா, நட்சத்திர குடும்பத்திலிருந்து எளிதாக சினிமாவிற்குள் நுழைந்துள்ளார்.
பின்பு அதிகமான பட வாய்ப்புகள் இல்லாமல் ஒதுங்கியிருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார்.
தொடர்ந்து சினிமாவில் அடுத்தடுத்து நடித்து வரும் வனிதா தற்போது தனது மகளையும் சினிமா பக்கம் கொண்டு வந்துள்ளார்.
அதாவது தனது மூத்த மகள் ஜோவிகா தயாரிப்பாளராக மாறியுள்ளார். மகளின் தயாரிப்பில் உருவான மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தினை வனிதாவே இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நடிகை வனிதா, தனது முன்னாள் கணவருடன் நடித்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழாவின் போது, சில சர்ச்சை எழுந்தது.
அதாவது தேவயானி வந்து வனிதாவின் பின்னே நின்று கொண்டிருக்க, வனிதா தலைக்கனமாக அமர்ந்துள்ளது ரசிகர்களை பல கேள்விகளை எழுப்பியது.
இந்நிலையில் இதற்கு தான் அவர்களை அமர கூறினேன். அவர் தான் அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று நின்று கொண்டிருந்தார்.
பின்பு தன்னை ரசிகர்கள் சரமாரியாக பேசுவார்கள் என்று கூறியதும் அவர் தன் அருகில் அமர்ந்தார். அவருக்கு மரியாதை கொடுக்காமல் திமிராக இருப்பவள் நான் கிடையாது என்று கூறினார்.
பரபரப்பு பேச்சு
இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை தேவயானி மகள் குறித்து வனிதா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், நானும் தேவயானியும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம். தேவயானியின் மகளோடு என் மகளை கம்பேர் செய்வது மிகவும் தவறு.
பொதுவாக நம்முடைய குழந்தைகளாக இருந்தாலும் ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு இணைத்து பேசுவது கூடாது. அவ்வாறு இருக்கும்போது, ஒரு நடிகையின் மகளோடு என்னுடைய மகளை இப்படி சேர்த்து வைத்து பேசுவது மிகவும் வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது தேவயானியின் மகள் பிரபல ரிவியில் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், இனியாவின் உடை குறித்தும், வனிதாவின் மகள் ஜோவிகா உடை குறித்தும் பேசி வருகின்றனர்.

Siragadikka Aasai: சீதாவின் திருமணத்திற்கு பரபரப்பாக மாப்பிள்ளை பார்க்கும் முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
