கடவுளுடன் பேசிய தருணம்...! இந்த மந்திரத்தை சொன்னால் நெருப்பும் தீண்டாது: வள்ளலார் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?
வள்ளலார் என்று சொல்லப்படும் இராமலிங்க அடிகளார் 5ஆம் திகதி அக்டோபர் 1823ஆம் ஆண்டு இராமையாபிள்ளை மற்றும் சின்னம்மையார் தம்பதிகளுக்கு கருணீகர் குலத்தில் பிறந்திருக்கிறார்.
இவருடன் சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் என நால்வர் உடன்பிறந்தவர்கள். இவருடைய அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவுகளை ஆற்றி வந்தவர். கல்வியில் நாட்டம் இல்லாமல் ஆன்மீக வழியில் செல்ல ஆரம்பித்தார்.
இவர் பின்னாளில் ஆன்மீகவாதியாக மட்டுமல்லாமல் இலக்கியவாதி, சொற்பொழிவாளர், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், சமூக சீர்திருத்தவாதி, புரட்சியாளர், சித்த மருத்துவர், ஜீவகாருண்யர், தீர்க்கதரிசி, ரசவாத வித்தகர் போல பல முகங்களைக் கொண்டவர்.
இராமலிங்கம் அடிகளார் பல கொள்கைகளையும் கோட்பாடுகளை கொண்டிருந்தவர். இவரின் முதல் நோக்கமானது சாதி, மத, பேதம், மொழி, இனம் இப்படி எதுவும் இல்லாமல் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்பதேயாகும்.
மேலும், இராமலிங்க அடிகளார் எவ்வாறு வள்ளலார் ஆனார் அவரின் பின்னணி என்ன? இறைவனுடன் பேசிய தருணம், என பல தகவல்களை கீழுள்ள காணொளியில் தெளிவாக காணலாம்.
இவ்வாறு பல கோட்பாடுகளை பின்பற்றி வாழ்ந்த வள்ளலார் வீட்டிற்கு எமது செய்தி குழுவினர் சென்று பல தகவல்களை தெரிந்துக் கொண்டிருக்கிறார். இவற்றைப் பார்த்து நீங்களும் பயனடையலாம்.