‘வடிவேலுவால் பறிபோன வாய்ப்புகள்’ கோபத்தில் குமுறிய பிரபல நடிகர்...?
வடிவேலுவால்தான் எனக்கு எல்லா வாய்ப்பும் போய்விட்டதாக என்று பிரபல காமெடி நடிகர் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நடிகர் வடிவேலு
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரை ‘வைகை’ புயல் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.
இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பல வருடங்கள் கழித்து, லைகா நிறுவன தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நடிகர் வடிவேலு நடிப்பில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ கடந்த ஆண்டு வெளியானது.
கோபத்தில் குமுறிய பிரபல நடிகர்
இந்நிலையில், பிரபல காமெடி நடிகர் சிஸ்ஸர் மனோகர் மிகுந்த கோபத்தோடு நடிகர் வடிவேல் குறித்து ஒரு சேனலில் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேட்டியில் கூறுகையில், நான் சினிமாவுக்கு வந்த தொடக்கத்தில் ராஜ்கிரணின் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன்.
அங்கு வடிவேலு ராஜ்கிரணிடம் உதவியாளராக இருந்தார். இதன் பிறகு, வடிவேலுவை நடிகர் ராஜ்கிரணின் நடிப்பில் “என் ராசாவின் மனசிலே” படத்தில் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது நான்தான் வடிவேலுவுக்கு துணையாக இருந்தேன்.
“தேவர் மகன்” படத்தின் படப்பிடிப்புக்கு கூட நான் தான் வடிவேலுவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அழைத்துச் செல்வேன். ஆனால், வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்து பிறகு எனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் தடுத்து நிறுத்தினார்.
“பகவதி” படத்தில் வடிவேலுவுக்கு இணையான ஒரு காமெடி ரோல் இருந்தது. எனக்கு வந்த அந்த வாய்ப்பை வடிவேலுதான் கெடுத்தார். நான் ரொம்ப கோபக்காரன். எனக்கு வடிவேல் மீது கடுமையான கோபம் வந்தது.
நமக்கெல்லாம் இப்படி செய்தால் எவ்வளவு கோபம் வரும். அதன் பிறகு சீமான்தான் என்னிடம் இனி வடிவேலுவிடம் பேச வேண்டாம் என்று கூறினார்.
அதன் பிறகு நான் வடிவேலுவுடன் நடிக்கவே இல்லை. ஆனால் ‘இம்சை அரசன்’ படத்தில் இளவரசர் கதாப்பாத்திரத்தில் நான்தான் நடிக்க வேண்டியிருந்தது.
சிம்பு தேவன் முதலில் அப்படித்தான் கதையை எழுதியிருந்தார். ஆனால், நடிகர் வடிவேலு என்னை அந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க விடவே இல்லை. அந்தப் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரமே எனக்கு கிடைத்தது என்றார்.