கை, கால்கள் செயலிழந்த நடிகருக்கு அடுத்தடுத்து கிடைக்கும் உதவி! நடிகர் வடிவேல் எவ்வளவு கொடுத்தார்?
தமிழ் சினிமாவில் கொமடி மற்றும் சண்டை காட்சிகளில் நடித்த பிரபல நடிகர் வெங்கல்ராவ் கை மற்றும் கால் செயலிழந்து அவதிப்பட்ட நிலையில், இவருக்கு பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருகின்றனர்.
நடிகர் வெங்கல்ராவ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் தான் காமெடி நடிகர் வெங்கல்ராவ். இவர் கடந்த மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தற்போது இவரது ஒரு கை மற்றும் கால் செயலிழந்து இருப்பதாக கூறப்படுவதுடன், மருத்துவ சிகிச்சைக்கு பண வசதி இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளார்.
மேலும் பேச முடியாமலும் தவிக்கும் இவர் தனது மருத்துவ செலவிற்கு பண உதவி கேட்டு சினிமா கலைஞர்களிடம் உதவி கேட்டு வந்த நிலையில் தற்போது பலரும் உதவி செய்து வருகின்றனர்.
இவர் வடிவேலு உடன் பல படங்களில் நடித்திருந்த நிலையில், அவர் உதவி செய்யாவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.
வடிவேல் உதவி
நடிகர் சிம்பு வெங்கல் ராவ் சிகிச்சைக்காக இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்திருந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் ரூ.25 ஆயிரம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் வடிவேலு வெங்கல் ராவ் சிகிச்சைக்காக தற்போது 1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்துள்ளதுடன், தொலைபேசி மூலம் அவரது உடல்நிலை குறித்தும் விசாரித்துள்ளாராம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |