விசித்ரா கணவருக்கு போன் செய்த கமல்... பேசியது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள விசித்ரா சினிமாவில் தான் கடந்து வந்த தொந்தரவு குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா என 11 பேர் வெளியேறியுள்ளனர்.
இவர்களின் அனன்யா மற்றும் விஜய் வர்மா இருவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். கடந்த வாரத்தில் வைக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் விசித்ரா சினிமாவில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட தொந்தரவினைக் குறித்து பேசியுள்ளார்.
அவர் நடித்த படத்தின் கதாநாயகன் தன்னை ரூமுக்கு வருமாறு அழைத்த நிலையில், தான் செல்லாமல் இருந்ததால் அடுத்தடுத்து பல பிரச்சினையை கொடுத்ததாக கூறியுள்ளார். இவர் தெலுங்கு படத்தின் ஹீரோ என்பது தெரியவந்துள்ளது.
குடித்துவிட்டு தனது அறை கதவை தட்டும் நிலையில், இந்த பிரச்சினையிலிருந்து காப்பாற்றியது அப்பொழுது அந்த ஹொட்டலில் மேலாளராக வேலை செய்தவர் தான் என்றும் அவரை தான் தான் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்.
கணவருக்கு போன் செய்த கமல்
இந்நிலையில் விசித்ராவின் கணவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் போன் செய்து பாராட்டியுள்ளார். இதற்கு விசித்ரா கணவர் யார் அந்த இடத்தில் இருந்திருந்தாலும் இதனைத் தான் செய்திருப்பேன் என்று கூறியுள்ளார்.
இதனைக் குறிப்பிட்டு கமல் ஷோவில் பாராட்டும் தெரிவித்துள்ளதுடன், விசித்ரா இந்த விடயத்தினை தனது குழந்தைகளிடம் கூட சொல்லாமல் இருந்தார் என்றும் பிக் பாஸ் வரும் முன்பு அந்த விடயத்தை கூறவா வேண்டாமா? என்று கணவரிடம் பேசிவிட்டு தான் வந்துள்ளார் விசித்ரா.