3 அடி வாய்க்காலில் தேங்கி நின்ற மழைநீர் - அடுத்தடுத்து விழுந்த நபர்கள் - அதிர்ச்சி வீடியோ!
3 அடி வாய்க்காலில் தேங்கி நின்ற மழைநீரில், அடுத்தடுத்து விழுந்த நபர்களின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வாய்க்காலில் அடுத்தடுத்து விழுந்த நபர்கள்
தொடர்ந்து தமிழகத்திலும், வட மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. காஜியாபாத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், காஜியாபாத்தில் தொடர் கனமழையால் ஆங்காங்கு வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது, சாலையில் வந்த இரு நபர்கள் தேங்கி நிற்கும் 3 அடி ஆழமுள்ள வாய்க்கால் என்று தெரியாமல் 2 பேர் அடுத்தடுத்து விழுந்தனர். அந்த சாக்கடைத் தண்ணீரில் விழுந்த அவர்களை அருகில் இருந்தவர்கள் உடனே ஓடி வந்து அவர்களை மீட்டனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த வாய்க்காலை மூட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது இது தொடர்பான சிசிடிவி வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தேங்கி நிற்கும் மழை நீரில் ஜாக்கிரதையாக நடந்து செல்லுங்கள். மேலும், வாகனத்தை பாதுகாப்பாக ஓட்டிச் செல்லுங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.