எலுமிச்சை தோலை இனி தூக்கி போடாதீங்க.. இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
எலுமிச்சை தோலை வெளியே தூக்கி வீசும் நபர்களுக்கான அருமையான பதிவே இதுவாகும்.
எலுமிச்சை தோல்
எலுமிச்சை தோல் அருமையான கிருமி நாசினியாக பயன்படுகின்றது. சோப் பேக்கிங் டோ போன்ற பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்வதற்கு பதிலாக எலுமிச்சை தோலுடன் உப்பு சேர்த்து சுத்தம் செய்தால் சிறந்த பலனை அடையலாம்.
பொதுவாக எலுமிச்சையை ஜுஸ், டீ, ரசம் இவற்றிற்கு அதிகமாக பயன்படுத்துகின்றோம். எலுமிச்சையில் சாறை எடுத்துவிட்டு தோலை தூக்கி வீசிவிடுகின்றோம்.
அதிகமான தோல்கள் சேர்ந்தால் அதனை ஊறுகாய் போன்று செய்து நீண்ட நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
எலுமிச்சையில் அமிலச்சத்து மற்றும் நறுமணம் கொண்டதால், இதை வைத்த பாத்திரங்களை சுத்தம் செய்தால் நன்கு பளபளப்பாகவும், மனமாகவும் இருக்கும்.
எலுமிச்சை தோலின் பயன்கள்
காய்கறிகளை நறுக்குவதற்கு பயன்படுத்தப்படும் கட்டிங் போர்டுகளை சுத்தம் செய்வதற்கு எலுமிச்சை தோலை பயன்படுத்தலாம்.
பாத்திரம் கழுவும் தொட்டி, முகம் கழுவும் தொட்டி இவற்றினை சுத்தம் செய்வதற்கு பயன்படுகின்றது.
மைக்ரோவேவ் ஓவனில் கெட்ட வாடை இருக்கலாம் அல்லது அழுக்குகள் இருக்கலாம். ஒரு பவுலில் எலுமிச்சை தோல்களைப் போட்டு சூடேற்றினால் அது ஆவியாகி மைக்ரோவேவ் ஓவன் முழுவதும் பரவும். அதற்குப் பிறகு இதை சுத்தம் செய்யலாம்.
காப்பர் பாத்திரங்களில் தண்ணீர் அருந்துகின்ற பழக்கம் பெரும்பாலான வீடுகளில் உண்டு. சிலர் அதில் உணவை வைத்து பயன்படுத்துகின்றனர். அத்தகைய பாத்திரங்களை எலுமிச்சை தோல் வைத்து சுத்தம் செய்யலாம்.
டீ, காஃபி போடும் பாத்திரங்களில் கறை படிந்து அழுக்காக காட்சி அளிக்கின்றது. அத்தகைய பாத்திரங்களை எலுமிச்சை தோலை வைத்து சுத்தம் செய்தால் பளபளப்பாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |