டிரம்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு அதிரடி முடக்கம்; காரணம் என்ன? அதிர்ச்சியில் பயனாளர்கள்
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்க அதிபராக அவருக்கு வரும் 20-ம் தேதி முறைப்படி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது.
இதனையடுத்து, அமெரிக்காவின் 46-வது அதிபராக அவர் பதவி ஏற்க வழிவகை செய்ய அவரது வெற்றியை அங்கீகரித்து சான்றிதழ் அளிக்கு நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது. அப்போது, நாடாளுமன்றத்தின் அருகே திரண்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள், நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர்.
இதனால், ஏற்பட்ட கலவரம், மோதலில் 4 பேர் உயிரிழந்தனர். இதற்கு ட்விட்டரில் ட்ரம்ப் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவிட்ட கருத்துகளே காரணம் எனக் கூறப்பட்டது. மேலும், அதிபர் டிரம்பின் டுவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கப்படும் என்றும் மேற்கொண்டு வன்முறை பரவாமல் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ட்ரம்பின் @realDonaldTrump டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்கின்ற பயனாளர்கள் 88 மில்லியன் பேர் அதிர்ச்சி அடைந்தனர்.