தற்கொலை செய்துகொண்ட மிஸ் அமெரிக்கா அழகி! அமெரிக்காவில் அதிர்ச்சி
மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியில் பட்டம் வென்ற ஜாஸ்லி ரிஸ்ட் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் நடைப்பெற்ற மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியில் 2019-ம் ஆண்டு பட்டம் வென்றவர் ஜாஸ்லி ரிஸ்ட்(30). இவர், நியூயார்க் மாகாணத்தில் உள்ள மென்ஹெண்டன் நகரில் 60 மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், ஜாஸ்லி ரிஸ்ட் என்பவர் தான் வசித்து வந்த 60-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடைசியாக இவர், 29-வது மாடியில் நின்றுகொண்டிருந்தபோது சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளார்.
அதன் பின்னர் அவர் எந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகவில்லை. இதனால், அவர் கட்டிடத்தின் 29-வது மாடியில் இருந்தே கிழே குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் ஜாஸ்லி ரிஸ்ட் தனது இஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த நாள் உங்களுக்கு ஓய்வையும் அமைதியையும் கொண்டுவரும்’ என பதிவிட்டுள்ளார்.
இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மிஸ் அமெரிக்கா பட்டம் பெற்ற ஜாஸ்லி ரிஸ்ட் 60-வது மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.