பெண்களை குறி வைத்து தாக்கும் சிறுநீர் பாதை தொற்று! இதற்கு என்ன தீர்வு தெரியுமா?
பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளில் “சிறுநீர் பாதை தொற்று” முக்கிய இடத்தை பிடிக்கிறது. இந்த நோய் தொற்று பொதுவாக பெண்களுக்கு மாத்திரம் அதிகம் ஏற்படும்.
மேலும் நூற்றிற்கு என்பது சதவீதமான பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்று இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் ஒரு நோயாளியாக கருதப்பட மாட்டார்கள். ஆனால் இந்த நோய் பாதிப்பு பெண்களுக்கு பல விதமான அசௌகரியங்கள் ஏற்படுத்தும்.
மேலும் சிறுநீர் பாதை தொற்று எவ்வாறு எமது உடலில் இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ள சில அறிகுறிகள் காட்டும். அதாவது அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் கூறலாம்.
அந்தவகையில் “சிறுநீர் பாதை தொற்றுக்கான தீர்வு” என்னவாக இருக்கும் என்பது குறித்து தீவிரமாக யோசனை இருக்கும். தீர்வு தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
இளநீர் செய்யும் மருத்துவ வித்தைகள்
1. பொதுவாக பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு இளநீர் முக்கிய நிவாரணியாக பார்க்கப்படுகிறது. மேலும் கர்ப்ப கால பிரச்சனைகள் முதல், சிறு நீர் பாதை தொற்று வரை உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக பார்க்கப்படுகிறது.
2.இளநீரில் அதிகமாக பொட்டாசியம், சோடியம் மற்றும் கால்சியம் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதனால் இளம்நீரை டையூரிடிக் என்றும் கூறுகிறார்கள்.
3. மேலும் சிறுநீர் பாதை தொற்று ஏற்பட்டால் சிறுநீர் கழிக்கும் போது ஒரு வகையான எறிச்சல் ஏற்படும். இதனை தடுப்பதற்காக இளநீர் எடுத்துக் கொள்வார்கள். ஏனெனின் உடலிலுள்ள PH அளவை சமநிலைப்படுத்த உதவியாக இருக்கிறது.
4. பெண்களுக்கு சிறுநீர்ப்பையில் அதிகம் பாக்டீரியாக்கள் இருக்கிறது. இதனை ஆங்கில மருத்துவத்தின் மூலம் சுத்தம் செய்யலாம். ஆனால் இது அவ்வளவு பொருத்தமாக இருக்காது. இது போன்ற பிரச்சினையுள்ளவர்கள் தினமும் காலையில் இளநீர் குடிக்கலாம்.
5. தினமும் பெண்கள் அதிகமான தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தொடர்ந்து செய்வதால் வயிற்றுப்பகுதி சுத்தமாவதுடன் அடிக்கடி சிறுநீர் கழித்தால் பாக்டீரியாக்களின் தாக்கம் இருக்காது.