யூரிக் அமில பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? இந்த ஒரே ஒரு சட்னி போதுமாம்
யூரிக் அமில பிரச்சனையை சரிசெய்வதற்கு வீட்டிலேயெ நாம் செய்யும் சட்னியைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
யூரிக் அமிலம்
இன்றைய காலத்தில் யூரிக் அமில பிரச்சனை பெரும்பாலான நபர்களை தாக்குகின்றது. யூரிக் அமிலம் என்பது பியூரின்கள் எனப்படும் புரதங்களின் முறிவினால் உடலில் உருவாகும் ஒரு கழிவுப்பொருளாகும்.
இவை சரியான அளவில் நமது உடம்பில் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் மூட்டுவலி, வீக்கம், நடப்பதில் சிரமம், சிறுநீரகத்தில் கற்கள், சோர்வு, பசியின்மை பிரச்சனை ஏற்படுகின்றது.

அன்றாட பழக்கவழக்கங்களில் கவனம் எடுப்பதுடன், உணவுப்பழக்கங்கள் யூரிக் அமில பிரச்சனையை கட்டுப்படுத்துகின்றது. ஆதலால் ஆரோக்கியமான உணவுகளை சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியில் விற்கப்படும் துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கவும்.
குளிர்காலத்தில் யூரிக் அமில பிரச்சனை அதிகரிக்கின்றது. இந்நிலையில் யூரிக் அமில பிரச்சனையை போக்கும் நெல்லிக்காய் சட்னி எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

நெல்லிக்காய் சட்னி
2 அல்லது 3 நெல்லிக்காயை நறுக்கி மிக்ஸியில் சேர்க்கவும். இதில் சிறிதளவு கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும். இதனுடன் 1 ஸ்பூன் வெள்ளை எள்ளையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காயை சட்னி மட்டுமின்றி ஜாம் செய்தும் சாப்பிடலாம். அவ்வாறு இல்லையெனில் இரவில் வெதுவெதுப்பான நீரில் 1 ஸ்பூன் நெல்லிக்காய் பொடி சேர்த்து சாப்பிடலாம்.
தேனுடன் நெல்லிக்காய் கலந்து சாப்பிடுவது கூடுதல் நிவாரணம் அளிக்கும்.

யூரிக் அமிலம் ஏற்பட காரணம்?
யூரிக் அமிலம் ஏற்படுவதற்காக காரணங்கள் அதிகமாக இருக்கின்றது. அதாவது வறுத்த மற்றும் அசைவ உணவுகளை உட்கொள்வது
சிவப்பு இறைச்சி, கடல் உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வது.
மது மற்றும் பீர் அருந்துதல், இனிப்பு பானங்கள் மற்றும் குளிர்பானங்களை அதிகமாக உட்கொள்வது.
அதிகமான தண்ணீர் அருந்துவது, நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகியை காரணமாக இருக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |