உங்க பிறந்த திகதி இதுவா? அப்போ 31 திகதி இதை செய்ங்க... 2026 சிறப்பாகும்
தற்போது 2026ம் ஆண்டிற்கு எல்லோரும் ஆர்வமாக இருக்கிறாம். அந்த வகையில் 2025 31 ம் திகதி குறிப்பிட்ட சில திகதியில் பிறந்தவர்கள் செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.
பரிகாரம்
தற்போது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம். இன்றைய நாளுடன் 2026 புத்தாண்டில் நுழையவுள்ளோம். பொதுவாக ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது, அந்த ஆண்டு சிறப்பாக இருக்க பல்வேறு விஷயங்களைப் பின்பற்றுவோம்.
இந்த நிலையில் 2026 புத்தாண்டு மகிழ்ச்சியும், செழிப்பும் நிரம்பியிருக்க விரும்பினால், கடந்த வருடத்தின் எதிர்மறை சக்தியை உங்களிடம் இருந்து அகற்ற வேண்டும்.
இதற்கு நாம் இந்த 2025ம் ஆண்டு முடிவில் சில விடயங்களை செய்ய வேண்டும். அவற்றை செய்யும் போது நம்மை சுற்றியுள்ள எதிர்மறை ஆற்றல்கள் விலகி விடும்.
எண் கணிதத்தின் படி, 2026 புத்தாண்டு சிறப்பாக இருக்க டிசம்பர் 31 ஆம் தேதி ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த தேதிப்படி என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

எந்த திகதியில் பிறந்தவர்கள்
1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி உங்கள் மீதான திருஷ்டியைக் கழிக்க ஒரு கைப்பிடி கல் உப்பை எடுத்து, உங்களை மூன்று முறை சுற்றி, நீரில் போட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எதிர்மறை ஆற்றல் உங்களிடம் இருந்து விலகும்.
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி உப்பை நீரில் கரைத்து, அந்நீரால் கைகளைக் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களின் மனதில் உள்ள பாரம் குறைந்து, புத்தாண்டில் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி இரவு தூங்கும் போது தலையணைக்கு அடியில் ஒரு கிராம்பை வைத்து தூங்க வேண்டும். இப்படி செய்வதனால் மனதில் உள்ள குழப்பம் நீங்கி, மனம் அமைதியாகும்.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு சிட்டிகை மிளகை எடுத்து வீட்டு வாசலில் சில மணிநேரம் வைத்து, பின் நள்ளிரவில் அதை தூக்கி வீச வேண்டும். இப்படி செய்தால் உங்கள் மனதில் பயம் குறையும்.
5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி கையில் ஒரு பிரியாணி இலையை சில நொடிகள் பிடித்து, மனதில் உள்ள ஆசைகளை கூறி, பின் அதை மென்மையாக கிழித்து வீச வேண்டும். இதனால் அமைதியின்மை இருந்து விடுதலை கிடைக்கும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி அது 3 கிராம்பை எடுத்து ஒரு காகிதத்தில் வைத்து மடித்து, அதை பையில் வையுங்கள். இப்படி செய்வதன் மூலம் நேர்மறை ஆற்றல் உங்களை சுற்றி நிரம்பியிருக்கும்.
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு சிறிய துண்டு கற்பூரத்தை எடுத்து, அதை எரித்து 30 நொடிகள் கூர்மையாக பார்க்க வேண்டும். இதனால் மனதில் உள்ள அழுத்தம் நீங்கி, மனம் புத்துணர்ச்சியும், தெளிவும் பெறும்.

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி ஒரு எலுமிச்சையை எடுத்து உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் உருட்டி, பின் வீட்டிற்கு வெளியே வீச வேண்டும். இதனால் பழைய மனக்கசப்புகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தாண்டிற்கு முந்தைய நாளான டிசம்பர் 31 ஆம் தேதி செய்ய வேண்டிய பரிகாரம் என்னவென்றால் ஒரு சிட்டிகை கருப்பு உப்பை எடுத்து, அதை கடிகார சுழற்சியில் உங்களைச் சுற்றி, நீரில் கரைக்க வேண்டும். இதன் மூலம் கோபம் மற்றும் பொறுமையின்மை குறையும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |