புத்தாண்டில் இந்த 3 ராசிக்கும் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடும்! 2023 எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி யார் யார் தெரியுமா?
2023 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான ஆண்டாக இருக்க போகின்றது.
இதுவரை நாம் 2023 ஆம் ஆண்டின் அதிர்ஷ்ட ராசிக்காரர்களைப் பார்த்தோம்.
இப்போது 2023 ஆம் ஆண்டின் துரதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
பிறக்க போகும் ஆண்டு உங்களுக்கு சற்று துரதிர்ஷ்டவசமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டில் நீங்கள் சற்று அலட்சியமாக இருப்பதால் பணியிடத்தில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதே வேளை, உங்களை நிதி பிரச்சினை வாட்டி வதைக்கும்.
மகரம்
குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டிருந்தாலும், பெரும்பாலும் நல்ல முடிவுகளை பெறுவதில்லை. இவர்களின் அன்பை யாரும் புரிந்து கொள்ளமாட்டார்கள். பிறக்கும் ஆண்டில் திருமணம் நடைபெறுவது சற்று சந்தேகம் தான். மொத்தத்தில், 2023 மகர ராசிக்காரர்களின் வாழ்வில் பல துரதிர்ஷ்டவசமான விஷயங்கள் நடக்கக்கூடும்.
கும்பம்
உங்களினால் பிறக்கும் ஆண்டில் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் போகும். இதனால் கடன் வாங்கும் அளவுக்கு நிதி பிரச்சனையை சந்திப்பார்கள். மொத்தத்தில் இந்த ஆண்டில் கடன் வாங்கி அதனாலேயே பல பிரச்சனையை சந்திப்பீர்கள். எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்.