Vastu Tips: இந்த செடிகளை வீட்டில் வளர்க்கிறீர்களா? பணப்பிரச்சனை ஏற்படுமாம்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, சில செடிகள் வீட்டுக்கு நெகட்டிவ் எனர்ஜியைக் கொண்டுவரும் என்று கூறப்படும் நிலையில் அவை என்னென்ன செடிகள் என தெரிந்து கொள்வோம்.
இந்த செடிகளை வீட்டில் வளர்த்தால், பணப்பிரச்சனை மற்றும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.
வீட்டிற்குள் இந்த செடி வேண்டாம்
கள்ளிச் செடி அல்லது முள் செடிகளை வீட்டில் வைப்பதால் பதற்றம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்குமாம். முட்கள், வாழ்க்கையில் வரும் தடைகள் மற்றும் பணக் கஷ்டங்களின் அடையாளமாகக் கருதப்படுகின்றது.

சீமைக்கருவேல மரத்தினை வீட்டில் வளர்த்தால் குடும்ப உறுப்பினர்களுக்குள் வாக்குவாதங்களும் சண்டைகளும் அதிகரிக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.

அரச மரத்தினை வீட்டு வளாகத்தில் வளர்த்தால் அசுபம் என்று வாஸ்து கூறுகின்றது. இவை வீட்டிற்குள் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

பால் வடியும் செடிகளையும் வீட்டில் வைக்கக்கூடாது. அதாவது செடியினை உடைத்தால் வெள்ளை நிறத்தில் பால் வடியும். இதனை வீட்டில் வைப்பதால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், பண இழப்பும் ஏற்படுகின்றது.

பசுமையாக மற்றும் முட்கள் இல்லாத செடிகளை வீட்டில் வளர்க்க வேண்டும். முள் செடிகளை வீட்டுக்கு வெளியே அல்லது காம்பவுண்ட் அருகே வைக்கலாம். ஆனால் வீட்டுக்குள் மட்டும் வைக்க வேண்டாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |