யாழ் பல்கலைகழக்கத்தில் தொடர் போராட்ட பதற்றம்; மக்களின் ஆதரவை கோரும் மாணவர்கள்!
இலங்கையில், யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்து அழிக்கப்பட்டதை எதிர்த்து பல்கலைகழக வாயிலில் இராணுவ, பொலிஸ் அடக்குமுறைகளை தாண்டி போராட்டம் தொடர்ந்துவருகிறது.
இதையடுத்து, நேற்றைய தினத்தில் இரவோடு இரவாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆசியுடன் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டிருக்கின்றது.
இதனை எதிர்த்து பல்கலைக்கழக வாயிலில் கூடிய பல்கலைக்கழக மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல்வாதிகள் இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இதனிடையே, இரவில் ஆரம்பித்த இப்போராட்டம் தற்போது வரை அப்போராட்டம் கைவிடப்படாமல் நடைபெற்று வருகின்றது. தற்போது, பெருமளவில் ஆயுதம் தாங்கிய, கலகமடக்க தயாராக அதிரடிப் படையினர், பொலிஸார், இராணுவத்தனர் பல்கலைக்கழத்தை சுற்றியுள்ளனர்.