உங்களுக்கு அடிக்கடி தொப்புள் அருகில் வீக்கம் ஏற்படுகின்றதா?
பொதுவாக நம்மில் பலருக்கு அடிக்கடி தொப்புள் அருகே வீக்கம் ஏற்படும். இது சில சமயங்களில் வலியை தரும்.
தொப்புள் அருகில் வலியில்லாமல் வீங்குவது 'அம்ப்ளிக்கல் ஹெர்னியா' என்ற குடல் இறக்கம் நோயால் தான் வருகின்றது.
ஆண்கள், பெண்கள் என இருபாலினரிடத்திலும் காணப்படுகிறது. எனினும், இந்த நோய் பெரும்பாலும் ஆண்களில் அதிகமாக காணப்படுகிறது.
பல்வேறு காரணங்களால் இந்த பிரச்சனை வருகிறது. அதனை தெரிந்து கொண்டு இதற்கு சரியான மருத்துவம் எடுத்தால் போதும்.
அந்தவகையில் தற்போது இந்த நோயை போக்க கூடிய சில எளிய சித்தமருத்துவங்களை இங்கே பார்ப்போம்.
ஏன் வீக்கம் ஏற்படுகின்றது?
வயிற்றுக்குள் ஏற்படும் வாயுவின் அழுத்தம், உடல் பருமன், வயிற்று தசைகளில் அதிகமான கொழுப்பு படிவது, நாள்பட்ட இருமல், மலச்சிக்கல், மலத்தை முக்கி கழிப்பது, அதிக பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற காரணங்களால் குடலுக்கு முன் உள்ள தசை வலுவிழந்து விடுவதால் குடல் இறக்கம் ஏற்படுகிறது.
மருத்துவம்
மலச்சிக்கல் ஏற்படாமல் எளிதாக மலம் கழிய மூலக் குடார நெய் - இரவு 5 முதல் 10 மி.லி. எடுக்க வேண்டும்.
வயிற்றில் உள்ள வாயுவின் அழுத்தத்தை குறைக்க குன்ம குடோரி மெழுகு 250 முதல் 500 மி.கி. இருவேளை சாப்பிட வேண்டும்,
வாயுவைப் பெருக்கும் உணவு வகைகளான கிழங்குகள், மொச்சை இவைகளை அளவோடு எடுக்க வேண்டும்.