அந்த அரசியல்வாதி கொடுத்த டார்ச்சரால் விரக்தியின் உச்சிக்கே சென்ற ‘பெப்சி’ உமா
அரசியல்வாதி கொடுத்த டார்ச்சரால் விரக்தியின் உச்சிக்கே சென்ற பெப்சி உமாவைப் பற்றி தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பெப்சி’ உமா
90 கிட்ஸின் பேவரெட் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் உமா. பிரபல தொலைக்காட்சியான சன் டிவியில் ‘பெப்சி உங்கள் சாய்ஸ்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் ‘பெப்சி உமா’ என்று அழைக்கப்பட்டார்.
ரசிகர்களுக்கு எப்போதும் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் தான் கனவு கன்னியாக இருப்பார்கள். ஆனால், முதல்முறையாக ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளினி இருந்த பெப்சி உமா ரசிகர்களுக்கு கனவு கன்னியாக மாறி சாதனைப் படைத்தார்.
புகழில் இருந்த பெப்சி உமாவிற்கு இயக்குநர் பாரதிராஜா ‘தாஜ்மஹால்’ படத்திலும், நடிகர் கமல்ஹாசன் ‘அன்பே சிவம்’ படத்திலும், ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அருணாச்சலம் படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது.
அது ஏன், ரஜினியே போன் செய்து படத்தில் நடிக்க அழைப்பு விடுத்தார். ஆனால், பெப்சி உமா பட வாய்ப்புகளை மறுத்து விட்டார்.
மிரட்டல் விடுத்த அரசியல்வாதி
பல கோடீஸ்வரர்கள் பெப்சி உமாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். ஆனால், அதற்கும் அவர் மறுப்பு தெரிவித்தார்.
ஆனால், ஒரு பிரபல அரசியல்வாதி கூட ‘பெப்சி’ உமாவை அணுகிய போது மறுத்துவிட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து தொழிலதிபரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பெப்சி உமா கலந்து கொண்டார். ரொம்ப ஆண்டுகளுக்கு பிறகு பெப்சி உமா புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி உமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுத்து வழங்க தயார் என்று தெரிவித்துள்ளார். மீண்டும் பெப்சி உமா தொலைக்காட்சிக்கு வருவாரா? என்று 90களின் கிட்ஸ்கள் ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |