பல மடங்கு வேகத்தில் உடல் எடையை குறைக்கனுமா? தினமும் காலையில் உளுந்து கஞ்சி சாப்பிடுங்க... தயாரிப்பு உள்ளே
நாகரீகம் என்று சொல்லிக்கொண்டு நமது பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டு எதை எதையோ சாப்பிட்டு ஆரோக்கியத்தை இழந்து வருகிறோம்.
அது மட்டும் இல்லாமல் கடைகளில் உணவுகளை வாங்கி சாப்பிட்டு இளம் வயதிலேயே எடை அதிகரிப்பு பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.
இன்று நாம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவும் உளுந்து கஞ்சியை எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 1டம்ளர் உளுந்து
- 1 டம்ளர் தேங்காய் துறுவல்
- 1 டம்ளர் வெல்லம் துறுவல்
- 3 ஏலக்காய்
செய்முறை
உளுந்தை ஊற வைத்து தேங்காய் யையும் உளுந்தை யும் மிக்ஸியில் அரைக்கவும்.
ஒரு கெட்டியான பாத்திரத்தில் அரைத்த மாவை கொட்டி கிளறி நன்கு உளுந்தமாவு வெந்ததும் வெல்ல துறுவல்கொட்டி ஏலக்காய் தூள் துவி இறக்கி விடவும்.
வெறும் 20 நிமிடம் போதும் சுவையான உளுந்து கஞ்சி ரெடி.
இது உடம்பிற்கு ஒரு ஆரோக்கியமான உணவு. உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க நினைப்பவர்கள் உளுந்து கஞ்சியை காலை உணவாக பருகலாம்.