உக்ரைன் ரஷ்யா போரால் உலக நாடுகளை பாதிக்கும் பொருளாதாரம் என்னென்ன?
உக்ரைன் ரஷ்யா போர் ஆனது தொடர்ந்து நடைப்பெற்று கொண்டிருக்கும் நேரத்தில், உலக நாடுகள் பல பொருளாதார சரிவை சந்தித்துள்ளது.
இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவும், உக்ரைனும் சமையல் எண்ணெய்யை மிக அதிக அளவு ஏற்றுமதி செய்கின்றன.
இந்தியா தனது 70 சதவீத சூரிய காந்தி எண்ணெயை இந்த 2 நாடுகளை சார்ந்துதான் இருக்கிறது. போரால், சமையல் எண்ணெய்யின் உற்பத்தி குறைந்ததோடு மட்டுமின்றி, அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது.
போர் தொடர்ந்து நடைபெறுவதால், பருப்பு மற்றும் தானிய வகைகளும் உயரும்,. குறிப்பாக ரஷ்ய படைகள் உக்ரைனின் விவசாய நிலங்களின் மீதும் குண்டுகளை வீசி வருகிறது.
இதனால் உணவு பொருட்களின் விலையில் நிச்சயமற்ற தன்மை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக உலகளவில், சோளத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உக்ரைனும் ஒன்று. துறைமுகங்கள், தரைவழிப் பாதைகள் மற்றும் விமான சரக்குகள் வழியாக உக்ரைன் மேற்கொள்ளும் ஏற்றுமதி குறைந்திருக்கிறது.
விலை உயர்வின் பாதிப்புகள்
லட்சக்கணக்கான மக்களின் உணவு பாதுகாப்பு மீது அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நிக்கல், பிளாட்டினம், பல்லேடியம் மற்றும் தங்கம் போன்ற அரிய உலோகங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.
ரஷ்யா மீதான கடுமையான பொருளாதாரத் தடைகள் உலோகங்கள் உலகச் சந்தையை அடைவதைத் தடுத்து, உலோகத் தட்டுப்பாடு குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. அடுத்து, கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு தற்போது 100-டாலருக்கு மேல் உள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இருக்கும் இந்தியாவிற்கு விலைவாசி உயர்வு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால், இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 40 சதவீதத்திற்கு மேல் இறக்குமதி செய்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் உயரும். உலகம் முழுவதும் விமான கட்டணமும் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.