உலக தலைவர்கள் கூடிய மாநாடு: வாளால் கேக் வெட்டிய பிரித்தானியா மகாராணி
இங்கிலாந்தில் G7 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ராணி இரண்டாம் எலிசபெத் வாளால் கேக் வெட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் G7 மாநாடு ஜூன் 11 முதல் 13 வரை நடைபெற்று வருகிறது, இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணி எலிசபெத் கலந்து கொண்டார், இவருடன் மகன் சார்லஸின் மனைவி கமிலா மற்றும் பேரன் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கலந்து கொண்டனர்.
இதில், வாளால் ராணி எலிசபெத் கேக் வெட்டி மகிழ்ந்தார், இந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
கணவர் பிலிப் இறந்த பின்னர், ராணி எலிசபெத் கலந்து கொள்ளக்கூடிய முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
