நடிகர் உதயநிதிக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா? முதன் முறையாக வைரலாகும் மகளின் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின்.
இவரைப்பற்றி சொல்லிதான் தெரிய வேண்டியதில்லை. கடந்த 2002ஆம் ஆண்டு கிருத்திகா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
அவர்களுக்கு இன்பநிதி என்ற மகனும் தமன்யா என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், தற்போது உதயநிதி ஐபிஎல் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக தனது மகளுடன் துபாய்க்கு சென்றுள்ளார்.
அங்கு மைதானத்தில் தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.