முதல்வரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்... கொரோனா நிதிக்கு எவ்வளவு கொடுத்தார் தெரியுமா?
தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி ஸ்டாலின் கொரோனா பொது நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் காசோலையினை தலைமை செயலகத்திற்கு சென்று கொடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு எம்.எல்.ஏ-வாக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் மக்களின் கோரிக்கையை அவர்களது இடத்திற்கே சென்று நிறைவேற்றி வருகின்றார்.
10 ஆண்டுகளுக்கு பின்பு அரியணையில் ஏறியிருக்கும் திமுக-வின் செயல்கள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.
பதவியேற்ற நேரம் மிகவும் கோரமான நேரமாக அமைந்துள்ளது. ஆம் கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் இந்தியா பயங்கர பாதிப்பினை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் நிவாரண நிதி வழங்க வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், திரைப்பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள், சாமானிய மக்கள் என தங்களால் முடிந்த தொகையினை முதல்வர் நிதிக்கு செலுத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் திருவல்லிக்கேணி எம்எல்ஏ-வான ஸ்டாலின் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது சார்பாக ரூ.25 லட்சம் நன்கொடையினை காசோலையாக செலுத்தியுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர்-தலைவர் @mkstalinஅவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினேன்.முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியளிப்போம். ஒன்றிணைந்து செயல்பட்டு பெருந்தொற்றை வெல்வோம் pic.twitter.com/5F1m9LgMvX
— Udhay (@Udhaystalin) May 13, 2021