வணக்கம் கூறிய உதயநிதியை கண்டுகொள்ளாத எடப்பாடி... தீயாய் பரவும் மாஸ் புகைப்படம்
உதயநிதி ஸ்டாலின் வைத்த வணக்கத்திற்கு எடப்பாடி வணக்கம் வைக்காமல் மலைத்து போய் பார்த்த புகைப்படத்தினை தொண்டர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தேர்தலில் மாபெரும் பெற்ற பின்பு உதயநிதி, மூத்த தலைவர் நல்லகண்ணு, பின்பு விஜயகாந்த் கூட்டணியில் இடம்பெற்ற தலைவர் என அனைவரையும் சந்தித்து ஆசீ வாங்கினார்.
இதில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது விஜயகாந்தை சந்தித்தது தான். ஏனெனில் தேர்தலுக்கு முன்பு விஜயகாந்தின் மகன் மற்றும் மனைவி இருவரும் திமுக கட்சியினை பயங்கரமாக விமர்சித்து வார்த்தைகளை விட்டனர்.
ஆனால் இதனை மனதில் வைத்துக்கொள்ளாமல், உதயநிதி அவர்களின் வீட்டிற்கு சென்று ஆசி வாங்கினார்.
இதே போன்று சட்டசபையில் எம்எல்ஏ-வாக பதவி ஏற்க சென்ற தருணத்தில், நடந்துள்ள சம்பவத்தினை தொண்டர்கள் புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர்.
தமிழகத்தின் பாரம்பரியமும்-பெருமையும் கொண்ட சட்டமன்றம் இன்று கூடியபோது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டேன். இந்த மகத்தான வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு முதல்வர் - தலைவர் @mkstalin அவர்கள் உள்ளிட்ட தலைமைக்கழகத்தினர் - தொகுதி மக்கள்..1/2 pic.twitter.com/Qm3UXW3MYz
— Udhay (@Udhaystalin) May 11, 2021
இந்நிலையில் எம்.எல்.ஏவாக பதவியேற்றுக் கொண்டு திரும்பி வரும் போது உதயநிதி முதல் வரிசையில் அமர்ந்திருந்த மு.க ஸ்டாலின் உள்ளிட்டோரை பார்த்து வணங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உதயநிதியோ எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோரை பார்த்து வணக்கம் சொன்னார்.
இதையடுத்து ஓபிஎஸ் பதிலுக்கு வணக்கம் வைத்தாலும், பழனிசாமி அமைதியாகவே இருக்கிறார். பதிலுக்கு வணக்கம் ஏதும் சொல்லவில்லை. ஆனால் உதயநிதி எடப்பாடி பழனிசாமிக்கு வணக்கம் வைக்கும் புகைப்படத்தை அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
