Uber Camel Ride: துபாய் பாலைவனத்தில் ஒட்டக Uber சவாரி! ஆச்சரியப்படுத்தும் காணொளி
துபாய் பாலைவனத்தில் Uber சவாரியாக ஒட்டக சவாரி செய்வது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு பல நெட்டிசன்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஒட்டக Uber சவாரி
துபாய் ஒரு வறண்ட பாலைவன பூமிகளாகும். இங்கு தண்ணீருக்கு பஞ்சம் உண்டாகும். ஆனால் இங்கு அடுக்கு மாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்களும், நவீன ஷாப்பிங் மால்கள் என பிரபலமான சுற்றுலாத் தளங்கள் என பல விதமாக மாறிவிட்டது.
துபாய் சென்றால் அனைவரும் ஒட்டக சவாரி சென்று வர ஆசைப்படுவார்கள். இந்த பாலைவனத்தில் சில நேரங்களில் பயணம் செய்ய யாராவது சிரமப்பட்டால் இவர்கள் உபரில் ஆர்டர் செய்து ஒட்டக பயணம் மேற்கொள்ளலாம்.

இப்படி ஒரு சம்பவத்தை தான் ஒரு இளம் பெண் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இரண்டு இளம் பெண்கள் பாலைவனத்தில் தங்கள் வாகனம் மூலம் சவாரி செய்ய முடியாமல் தவித்த நிலையில் ஒரு பெண் தன்னிடம் இருந்த உபர் ஆப்-பில், ஓட்டக சவாரி குறித்து தேடி உடனே அந்த சேவையை புக் செய்ததாகவும் தெரிவிக்கிறது.
இதன் பின்னர் அங்கு ஓட்டகத்தை அழைத்துக்கொண்டு ஒருவர் வருவதை காண முடிகிறது. மேலும் அவர் தன்னை உபர் ஒட்டக டிரைவர் என்றும் அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்.
பின்னர் பெண்கள் உற்சாகமாக ஒட்டகத்தில் ஏறி அமர்வதும் வீடியோவில் உள்ளது. மேலும் ஓட்டக டிரைவர் தனக்கு இது தான் தொழில் என்றும் பாலைவனத்தில் சிக்கியவர்களை மீட்கும் உபர் ஓட்டக டிரைவர் தான் என்றும் தெரிவிக்கிறார். வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் காட்டப்படும் AED 50.61 எனப்படுவது ரூ. 1,163 க்கு ஒட்டக சவாரி சென்றதாக காட்டுகிறது. இந்த காணொளி இணையத்தில் வைரலாகி லட்சக்கணக்கான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        