இந்த குணம் கொண்ட பெண்களை ஒரு போதும் நம்பாதீங்க- ஆபத்து நிச்சயம்
பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், குறிப்பிட்ட சில குணம் கொண்ட பெண்களை நம்ப வேண்டாம் என சாணக்கியர் கூறுகிறார். அவ்வளவு மோசமான குணங்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
நம்பக் கூடாத பெண்கள்
1. மோசமான குணம் கொண்ட பெண்களை ஒரு போதும் நம்ப கூடாது என சாணக்கியர் கூறுகிறார். இவர்கள் எப்போதும் மற்ற ஆண்களிடம் ஈர்க்கப்படுவார்கள். அத்தகைய சூழ்நிலையில், கணவன் அவருடைய முதன்மையான எதிரியாக மாறுவார். இந்த பழக்கம் கணவர்களின் வருங்காலத்தை பாதிக்கிறது. இப்படியான பெண்களிடம் சேர்க்கை வைத்து கொண்டால் ஒரு நாள் நீங்களும் பிரச்சினையில் சிக்கலாம்.
2. அளவுக்கு அதிகமாக அழகாக இருக்கும் பெண்களை நம்ப வேண்டாம். பெண்களுக்கு வெளிபுற அழகை விட ஒழுக்கம், கல்வி, குணம் இவைகளே பூரண அழகை கொடுக்கிறது. இதில் ஒரு பெண் சரியாக இருந்தால் அவள் தான் உண்மையான அழகி என்கிறார்கள். எனவே ஒருவரின் வெளிபுற தோற்றத்தை வைத்து யாரையும் முடிவு செய்ய வேண்டாம்.
3. பேராசை என்பது மிக ஆபத்தான பழக்கமாக பார்க்கப்படுகின்றது. குடும்பங்களை கூட சில வேளைகளில் கலைத்து விடும். ஒரு பெண்ணிடம் அதிகமாக பேராசை இருப்பது போன்று தோன்றினால் அவரிடமிருந்து சற்று விலகி இருக்க வேண்டும்.
4. தற்பெறுமைக் கொள்ளும் பெண்களை ஒரு போதும் நம்ப வேண்டாம். இவர்கள் தற்பெறுமைக் கொண்டு வீட்டிலுள்ள அனைவரையும் இல்லாமலாக்கி விடுவார்கள். இதன்படி, கர்வமுள்ள பெண்களின் நடத்தை முழு குடும்பத்தின் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அழிக்கிறது என சாணக்கியர் கூறுகிறார்.
5. ஒருவர் பற்றி இன்னொருவரிடம் பேசும் பெண்களை நம்ப வேண்டாம். இவர்களின் பேச்சிற்கு நீங்களே ஒரு நாள் இரையாகலாம். ஒருவர் பற்றிய ரகசியங்களை இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வது இழிவான செயல். இப்படியான பெண்களை நம்பி உங்கள் வாழ்க்கையின் ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
6. அளவிற்கு அதிகமாக சிரிக்கும் பெண்களை ஒரு போதும் நம்ப வேண்டாம். இவர்கள் சிரித்து சிரித்து எம்மையும் பிரச்சினைகளில் மாட்டி விடுவார்கள். மேலும் சிரித்து கொண்டே மற்றவர்களின் கதைகளை கேட்டுக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் நல்லவர்கள் அல்ல.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |