ஏலேய் முடில விட்றங்கம்மா.. குடும்பத்துடன் சேர பிக்பாஸ் வைத்து ப்ளான் போடும் வனிதா- கதறும் ரசிகர்கள்
தன்னுடைய மூத்த மகள் ஜோவிகாவை பிக்பாஸ் சீசன் 7 ற்குள் அனுப்ப நடிகை வனிதா அனைத்து வேலைகளையும் பார்த்து வருகின்றார்.
பிக்பாஸ்
தமிழ் டாப் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக கருதப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கப்படுகின்றது.
இந்த நிகழ்ச்சி இதற்கு முன்னர் சரியாக ஆறு சீசன்களை நிறைவு செய்த நிலையில் அக்டோபர் 8 ஆம் திகதி ஏழாவது சீசனை ஆரம்பிக்க இருக்கின்றது.
பல முன்னணி நட்சத்திரங்களை இரண்டு வீட்டில் 60க்கும் அதிகமான கேமரா முன்னிலையில் 100 நாட்களுக்கு மேலாக வாழ வேண்டும்.
இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் வரை பரிசாக கொடுக்கப்படும். பல மொழிகளில் நடக்கும் இந்த நிகழ்ச்சி தமிழில் 7வது சீசனை எட்டி இருக்கிறது.
விஜயகுமார் குடும்பத்தில் ஒருவர்
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தொடர்பில் சில தகவல்கள் இரகசியமாக வைக்கபட்டுள்ளது.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் விஜயகுமாரின் கடைசிய மகள் ஸ்ரீதேவி கலந்து கொள்ளவுள்ளாராம்.
அத்துடன் இந்த செய்தியை எப்படியோ தெரிந்து கொண்ட வனிதா தன்னுடைய மகள் ஜோவிகாவை வீட்டிற்குள் அனுப்புவதற்கு அனைத்து வேலைகளையும் பார்த்து வருகின்றார்.
வனிதாவின் மாஸ்டர் பிளான்
இவர்கள் இருவரும் வீட்டிற்குள் சென்றால் டிஆர்பி ரேட்டிங் பிச்சிக் கொண்டு செல்லும்.
இதனை தொடர்ந்து இந்த விடயம் விஜயகுமார் வீட்டிற்கு தெரிந்தால் ஸ்ரீதேவியை பின்வாங்க சொல்வார்களா? எனவும் சந்தேகமாக இருக்கின்றது.
மேலும் வனிதா இது போன்று பிளான்களை போட்டு விஜயகுமார் குடும்பத்துடன் சேர திட்டமிடுகிறார் என ரசிகர்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |