இந்த இரண்டு விருந்தாளிகள் இல்லனா முகேஷ் அம்பானி வீட்டில் விசேஷம் நடக்காதாம்! யார் யாருனு தெரியுமா?
தொழில் அதிபர் முகேஷ் அம்பானி வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் இந்த இரண்டு பேருக்குத்தான் அழைப்பு போகுமாம் யார் அந்த இரண்டு பேர்? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முகேஷ் அம்பானி
உலகில் பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்திருப்பவர் தான் முகேஷ் அம்பானி. இவர் ஒரு தொழிலதிபராவார். இவரின் மனைவியின் பெயர் நீதா அம்பானியாவார்.
சமீபத்தில் இவரின் இளைய மகனான ஆனந்த், ராதிகா மெர்சென்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தை உலகமே வியக்கும் அளவுக்கு நடத்திவிட்டார் முகேஷ் அம்பானி.
இந்த திருமணத்தில் சுமார் 2000 ற்கும் மேலான பிரபலங்கள் கலந்துகொண்டனர். பாலிவுட் பிரபலங்கள் பலரும் ஜாம்நகரில் நடந்த விசேஷத்தில் கலந்து கொண்டார்கள்.
மேலும் கிரிக்கெட் பிரபலங்களும் அம்பானி வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் முகேஷ் அம்பானி வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இல்லாமல் நடக்காது.
சச்சினும் சரி, ஷாருக்கானும் சரி அம்பானி குடும்பத்தாருக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படுகிறது.
மாப்பிள்ளையான ஆனந்த் அம்பானியின் காட்ஃபாதர் ஷாருக்கான் ஆவார். அதனால் காட்ஃபாதர் இல்லாமல் அம்பானி வீட்டில் விசேஷம் எதுவும் நடக்காது.