ஒரே வாட்ஸ் அப்பில் இரண்டு கணக்குகளை எப்படி பயன்படுத்துவது? வெளியான அசத்தல் அப்டேட்ஸ்
ஒரே போனில் இரண்டு வாஸ்ட் அப் கணக்குகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாட்ஸ் அப்
உலகம் முழுவதும் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ் அப் பல அப்டேட்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றது.
வாடிக்கையாளர்கள் பயன்படுத்துதலுக்கு ஏற்ப பல மாற்றங்கள் கொண்டு வரப்படுவதால், வாட்ஸ்அப் அனைவராலும் பயன்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் தற்போது ஒரே செயலியில் இரண்டு வாட்ஸப் கணக்குகளை பயன்படுத்துவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது பெரும்பாலான நபர்கள் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்துகின்றனர். ஒரு தனி நபர் கணக்காகவும், மற்றொன்று தொழில்ரீதியான தொடர்புகளுக்கு என இரண்டு அக்கவுண்டுகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்காக இரண்டு போன்களை பயன்படுத்தும் சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்நிலையில் ஒரே செயலியில் இரண்டு கணக்குகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்வோம்.
வாட்ஸப்பில் settings > Account > Add Account என்ற வசதிக்குள் சென்றால் கூடுதலாக ஒரு அக்கவுண்டை கனெக்ட் செய்து கொள்ளலாம்.
அதுபோல முன்பு புதிய ஸ்மார்ட்போனுக்கு வாட்ஸஅப் சேட்களை மாற்ற அடிக்கடி வாட்ஸ்அப்பை பேக்கப் செய்ய வேண்டியிருந்தது.
இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப்பில் வழங்கப்பட்டுள்ள Tranளfer Chats சென்றால் அதில் காட்டும் க்யூ ஆர் கோட் ஸ்கேனர் மூலம் புதிய ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்து அனைத்து சேட்களை புதிய ஸ்மார்ட்போனிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
மெட்டாவின் பேஸ்புக்கில் உள்ள அவதார் உருவாக்கிக் கொள்ளும் வசதியும் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |