எங்க அப்பா உயிருக்கு போராடுறாங்க!.. உதவி கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த நபர்
கொரோனாவால் உயிருக்கு போராடும் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை, படுக்கைக்கு அழைத்த நபரின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
டெல்லியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு படுக்கை கிடைக்காமல் உறவினர்கள் அல்லப்பட்டு வருகின்றனர், இந்நிலையில் பலரும் சமூகவலைத்தளங்கள் மூலம் உதவிகளை நாடுகின்றனர்.
சமீபத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், என் வீட்டருகே வசிக்கும் ஒருவரிடம், என்னுடைய தோழியின் இளைய சகோதரி கோரிக்கை விடுத்தார். 'என்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள சம்மதித்தால், ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்து தருவதாக அந்த நபர் கூறியுள்ளார்.
இது போன்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?' எனக் கேள்வி எழுப்பிஉள்ளார்.
அந்த நபர் மீது, போலீசில் புகார் அளிக்கும்படி பலரும் டுவிட்டரில் கமெண்ட் செய்து வரும் நிலையில், தங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.