ட்விட்டரில் Blue tick விலை எவ்வளவு தெரியுமா? இந்தியாவுக்கு எப்போது வரும்?
ட்விட்டர் ப்ளூ டிக் கட்டண முறை அடுத்த மாதத்தில் இருந்து இந்தியாவுற்குள் வரும் என்பதை எலான் மஸ்க் தெரிவிததுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து அடுத்தடுத்து எதிர்ப்பாராத பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றார்.
அண்மையில் ட்விட்டரில் ப்ளூ டிக் (Blue tick) பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.
Blue tick பெறுவதற்கு 8 டாலர் கட்டணம்
ட்விட்டரில் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம். ப்ளூ டிக் பெறுவதற்கு 8 டாலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணம் ஒவ்வொரு நாட்டின் வாங்கும் சக்திக்கு ஏற்ப மாறுபட்டுள்ளது.
A lot of folks have asked about how you'll be able to distinguish between @TwitterBlue subscribers with blue checkmarks and accounts that are verified as official, which is why we’re introducing the “Official" label to select accounts when we launch. pic.twitter.com/0p2Ae5nWpO
— Esther Crawford ✨ (@esthercrawford) November 8, 2022
இந்த சந்தா கட்டணம், முதலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அமல்படுத்தப்படுகிறது.
iOS அப்டேட் பதிப்பு 9.34.3 கொண்ட iOS பயனர்களுக்கு மட்டுமே இந்த சந்தா கட்டணம் தொடங்கப்பட்டுள்ளது.
Android பயனர்களுக்கு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, அறிமுக்கபடுத்தப்பட்ட பிறகு Android மற்றும் Web பயனர்களின் புளூ சந்தாவை அவர்களாகவே ரத்து செய்து கொள்ளலாம்.
Hopefully, less than a month
— Elon Musk (@elonmusk) November 5, 2022
இந்தியாவுக்கு கட்டணம் எப்போது வரும்
ட்விட்டரில் ஒருவர் எலான் மஸ்க்கிடம், இந்தியாவில் எப்போது ப்ளூ டிக் கட்டணம் அமலுக்கு வரும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், ஒரு மாதத்துக்குள் வந்துவிடும் தெரிவித்துள்ளார்.