எலான் மஸ்க்கின் சீக்ரெட்: டுவிட்டரின் புது CEO இந்தப்பெண் தான்
டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாகியாக பெண் ஒருவரை நியமிக்க உள்ளதாக எலான் மஸ்க் கூறியிருக்கிறார். தற்போது அனைவரின் தேடலும் யார் அந்தப் பெண் என்பது தான். குறித்தப் பெண் பற்றிய விரிவான பதிவு தான் இது.
எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், 44 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார்.
அந்நிறுவனத்தை வாங்கியதிலிருந்து பல புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் சமூக வலைத்தளங்களில் அடுத்தடுத்து இவரின் பெயர் அடிப்பட்டு வந்தது.
தினமும் எலான் மஸ்க் பற்றி எதாவது ஒரு சர்ச்சைகள் கிளம்பிக் கொண்டு தான் இருக்கும். இந்நிலையில், அவர் அண்மையில் கூட வாட்ஸ்ஆப் போல டுவிட்டரிலும் வீடியோ மற்றும் ஆடியோ கால் வசதிகளையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
எலான் மஸ்க் இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் புது CEOவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் டுவிட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அந்தப் பெண் 6 வாரங்கள் பணியை ஆரம்பிப்பார். தயாரிப்பு, மென்பொருள் மற்றும் அமைப்பின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும், நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக தனது பணி மாறும் என்று பதிவிட்டிருந்தார்.
புதிய CEO யார்?
இந்நிலையில் எலான் மஸ்க் நியமித்திருக்கும் இந்தப் பெண் லிண்டா யாக்கரினோ (Linda Yaccarino)என்பவர் தான்.
இவர் என்பிசி யுனிவர்சல் நிறுவனத்தின் விளம்பர சேல்ஸ் துறையில் தலைவராக இருக்கிறார். இவர் பெண் ஸ்டேட்ட யுனிவர்சிட்டியில் ஆர்ட்ஸ் என்ட் டெலி கம்யூனிகேஷன் படித்திருக்கிறார்.
மேலும், இவர் இருபது ஆண்டுகளுக்கு அதிகமாக தொழிநுட்பத் துறையில் சிறப்பாக இருந்து வருகிறார். தற்போது இன்னும் 6 வாரங்களில் டுவிட்டரின் CEOவாக பொறுப்பேற்பார்.
உலகின் முன்னணி சமூக ஊடகமான டுவிட்டர் ஊடகத்திற்கு ஒரு பெண்ணை தலைமை நிர்வாகியாக நியமித்திருப்பது வரவேற்கத்தக்கது என்று பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
Excited to announce that I’ve hired a new CEO for X/Twitter. She will be starting in ~6 weeks!
— Elon Musk (@elonmusk) May 11, 2023
My role will transition to being exec chair & CTO, overseeing product, software & sysops.