எலான் மஸ்கிற்கு எதிராக டுவிட்டரிலே சவால் விட்ட முன்னாள் ஊழியர்கள்! போட்டிக்கு வரும் புதிய செயலி
டுவிட்டர் நிறுவனத்திலிருந்து எலான் மஸ்கின் அதிரடி முடிவால் வெளியேற்றப்பட்ட ஊழியர்கள் டுவிட்டருக்கு எதிராக SPILL புதிய வலைத்தளம் ஒன்றை அறிமுகப்படுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணி நீக்கப்பட்ட ஊழியர்களின் கதறல்கள்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டரை வாங்கிய எலான் மஸ்க் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய இந்தியர்கள் பெருந்தொகையான ஊழியர்களை பணிநீக்கம் செய்தார்.
இதனால் தன்னையும் விலக்கி விடுவார்களோ என்ற பயத்தில் சிலர் தாமாகவே டுவிட்டர் நிறுவனத்தை விட்டு விலகினார்கள்.
இந்த காலக்கட்டத்தில் உலகின் முன்னணியில் இருக்கும் டெக் நிறுவனங்கள் தன்னிடம் இருக்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நோக்கில் பணியாளர்களை பணிநீக்கம் செய்தது.
இந்த தகவலை தெரிந்துக் கொண்ட டுவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களின் செயல்கள் கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
டுவிட்டருக்கு போட்டிக்கு வரும் புதிய செயலி
இந்த நிலையில் வெளியேறிய ஊழியர்கள் ஒன்றினைந்து SPILL எனும் சமூக வலைத்தளத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த செயலி அமுழுக்கு வரும் போது கண்டிப்பாக டுவிட்டரின் மார்க்கட்டை இறக்கும் என்று அவர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த சவாலில் என்ன டுவிஸ்ட் என்றால் இந்த செய்தியை ஊழியர்கள் டுவிட்டர் பக்கத்தில் தான் பகிர்ந்துள்ளார்கள். இதனை தொடர்ந்து இன்று இயங்கி வரும் டிஜிட்டல் உலகில் இந்த SPILL எவ்வாறு பயணிக்கும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் “எலான் மஸ்கிற்கு எதிராக திரும்புவது என்பது சாதாரண விடயம் அல்ல” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Here's your first sneak peek at SPILL - early access begins in a few weeks ☕️
— SPILL (@SpillMob) January 30, 2023
Hit the ? for some major updates including funding (!), hiring (!), & grab your handle if you haven't yet ⬇️https://t.co/Mi1hdpVFA9 | ?: "W.W.Y.D." by @TariqDisu pic.twitter.com/R45aCVVPIO