ஒரே ஆணை திருமணம் செய்த இரட்டையர்கள்! அப்பட்டமான சில உண்மைகள்
ஒரு ஆணை இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்துக் கொண்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம்
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் நகரை சேர்ந்த சகோதரிகள் ஐடி நிறுவனமொன்றில் பொறியியலாளராக பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள் தந்தை சிறுவயதில் இறந்து விட்டாராம் இதனால் இவர்களை வளர்க்க தாயார் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்.
அந்த சமயத்தில் தான் சுற்றுலா நிறுவனம் வைத்திருக்கும் “அதுல்” என்ற இளைஞர் நிறைய உதவிகளை செய்துள்ளார்.
இதனால் இவருக்கு இரண்டில் ஒரு மகளை திருமணம் செய்து கொடுக்கும் ஆசை அம்மாவிற்கு இருந்துள்ளது. சில சந்தர்ப்ப சூழ்நிலைக் காரணமாக இருவரையும் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
பொலிஸார் விசாரனையில் சிக்கிய உண்மைகள்
இந்நிலையில் பொலிஸாருக்கு தகவலறிந்து விசாரணைகள் நடத்தியதில் இவர்களின் திருமணம் இருவீட்டாரின் சம்மதத்துடன் தான் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவர்கள் சிறுவயது நண்பர்கள் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் பகிரந்துள்ளார்கள்.
Maharashtra: Man 'marries' twin techie sisters, booked https://t.co/n6Ml4oLGJ6
— The Times Of India (@timesofindia) December 5, 2022
இதனை பார்த்த நெட்டிசன்கள் "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என கலாய்க்கும் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.