திடீரென தனி விமானத்தை மாற்றிய விஜய் - ஒருநாள் வாடகை மட்டும் இவ்வளவா?
தவெக தலைவர் விஜய் ஈரோட்டில் மக்களை சந்தித்து பேசியுள்ளார்.
விஜய் பொதுக்கூட்டம்
இந்நிலையில், இந்த பயணத்திற்கு பயன்படுத்திய தனி விமானம் மற்றும் அதன் கட்டண விவரங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஈரோடு பயணத்திற்காக புதிய ரக சிறிய தனி விமானத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த விமானத்தின் மதிப்பு சுமார் ரூ. 8 கோடி முதல் ரூ. 100 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் ஒரு நாள் வாடகை தான். ஒரு நாள் வாடகை சுமார் ரூ. 14 லட்சம். ஒரு மணி நேரத்திற்கு தோராயமாக ரூ. 2 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது.
தனி விமானம்
முன்னதாக ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்றபோதும் அவர் தனி விமானத்தை பயன்படுத்தியிருந்தார். தற்போது நேர மேலாண்மை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக தனி விமான பயணத்தை மேற்கொள்கிறார்.
Chennai: Actor and TVK president Vijay departs from Chennai Airport by private jet to attend and address a public meeting in Erode today. pic.twitter.com/Aqk7Duy05Q
— IANS (@ians_india) December 18, 2025
பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு கொள்ளையடிப்பவர்கள் தான் எங்கள் அரசியல் எதிரி. திமுக ஒரு தீய சக்தி. மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான தவெகவால் மட்டுமே முடியும்.
தூய சக்தியான தவெகவிற்கும், தீய சக்தியான திமுகவிற்கும் தான் போட்டியே தவிர, களத்தில் இல்லாதவர்களை எதிர்க்கும் ஐடியா எனக்கு இல்லை என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.