நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்த சீரியல் நடிகை
பிரபல சீரியல் நடிகை நுரையிரல் பிரச்சனை காரணமாக கடந்த சில காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் கொடுக்காமல் தற்போது உயிரிழந்தார்.
சீரியல் நடிகை
பிரபல சீரியல் நடிகை நுரையீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிசிசை பெற்று வந்துள்ளார். சிகிச்சை பெற்று வந்தும் சிகிச்சை பலனழிக்காத காரணத்தினால் தற்போது உயிரிழந்துள்ளார்.
பாப்பா பண்டு, தெலுங்கு ஜானகி, காவலுதாரி, கன்னடி, காவ்யாஞ்சலி, பாந்தவ்யா, ஆனந்த சாகர், ஹூக்லி பிட் சர், கோதுலி மற்றும் ககனா குசுமா உள்ளிட்ட பல பிரபலமான தொடர்களில் நடித்துள்ளார்.

இவர் சீரியல்களில் மட்டும் இல்லாமல் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பிராணா, கிராம தேவதே, சிஹி முத்து மற்றும் கெம்டு தீபா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இப்படி இருக்க ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நடிகை ரஷ்மி லீலாவின் கணவர் சரிக்கு மஞ்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் என் மனைவி ரஷ்மி லீலா, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

இவர் 2019 ஆம் ஆண்டு முதல் நுரையீரல் ஃபைப்ரோஸிஸுடன் போராடி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக, அவர் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சையில் இருந்தார்.
விரைவில் அவர் குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தேன். ஆனால் அறுவை சிகிச்சை நடைபெற்றும் தொடர்ச்சியான சிகிச்சை இருந்த போதிலும் உடல் நிலை மிக மோசமாகி உயிரிழந்தார்.
இவரின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 1:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணிக்கு பனசங்கரி மின்மயானத்தில் நடைபெறும் என்றும், அவரின் உடல் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கட உள்ளதாக அவர் அந்த பதிவில் கூறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |