துருக்கி நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்த பறவைகள்! எச்சரிக்கை செய்த காட்சி இதோ
நேற்றைய தினத்தில் துருக்கியை புரட்டிப் போட்ட நிலநடுக்கத்தினை பறவைகள் முன்கூட்டியே எச்சரித்த காட்சியினை தற்போது காணலாம்.
துருக்கி நிலநடுக்கம்
சிரியா எல்லையின் தென்கிழக்கே, துருக்கியின் ஒரு பகுதியான காசியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் நேற்று அதிகாலை 3:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை 4000 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் மட்டும் 3முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், கட்டிடங்கள் அனைத்தும் தரைமட்டமாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் வருவதற்கு முன்கூட்டியே பறவைகள் மக்களை எச்சரிக்கும் விதமாக கூச்சலிட்டு வானில் வட்டமிட்டுள்ள காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினை 3 தினங்களுக்கு முன்பே டச்சு ஆராய்ச்சியாளர் ஒருவர் கணித்து டுவிட் செய்துள்ளதாராம். நிலநடுக்கத்தினை முன்கூட்டியே கணிக்கமுடியாது என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறிவரும் நிலையில், டச்சு ஆராய்ச்சியாளரான ஃபிராங்க் கூக்கல்பிட் என்பவர் கணித்து கூறியுள்ளார். ஆனால் இதனை அரசு கண்டுகொள்ளாமல் விட்டதால் இவ்வளவு உயிர்சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
?In Turkey, strange behavior was observed in birds just before the earthquake.?#Turkey #TurkeyEarthquake #Turkish pic.twitter.com/yPnQRaSCRq
— OsintTV? (@OsintTV) February 6, 2023