சாகசத்தின் போது விபத்தில் சிக்கிய யூடியூபர்: பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை!
பிரபல யூடியூபர் TTF வாசன் நேற்று பைக் சாகசத்திற்கு முயன்ற போது விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
யூடியூபர் TTF வாசன்
தற்போது இருக்கும் நவீன தொழிநுட்பத்தால் பலரும் எதையாவது செய்து பிரபலமாகி விட்டார்கள். அப்படி பிரபலமானவர் தான் யூடியூபர் TTF வாசன்.
இவர் யூடியூபில் ட்வின் த்ராட்லர்ஸ் என்ற சேனலில் பைக் ரைட் செய்து அதனை வீடியோவாக எடுத்து பதிவிட்டு இக்காலத்து இளைஞர்களின் மத்தியில் பிரபலமானார்.
இவர் யூடியூபில் மட்டுமல்ல சர்ச்சையிலும் மிகவும் பிரபல்யமானவர். இவரது யூடியூபில் 35 லட்சத்திற்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். மேலும், தற்போது சினிமாவிலும் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விபத்து
இந்நிலையில், நேற்று பைக்கில் சாகசம் செய்ய முயன்ற போது பைக் அவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்தரத்தில் பரந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் TTF வாசனுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |