யூரிக் அமிலத்தை அடியோடு இல்லாமல் செய்யணுமா? இந்த வீட்டு வைத்தியத்தை செய்ங்க
இன்றைய உணவுப் பழக்கம் மோசமடைந்து வருவதால், மக்கள் பல நோய்களுக்கு விரைவாக உள்வாங்கப்படுகின்றனர். இதில் அதிகமாக மக்கள் பாதிக்கப்படுவது யூரிக் அமிலத்தினால் தான்.
உணவுப் பழக்கத்தில் கவனக்குறைவு காரணமாக, உடலில் யூரிக் அமிலம் வேகமாக அதிகரிக்கிறது. பியூரின் நிறைந்த உணவு உட்கொள்ளல் அதிகரிக்கும் போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.
இதன் காரணமாக சிறுநீரகத்தால் அதை முழுமையாக அகற்ற முடியாது. இதனால் யூரிக் அமிலம் மூட்டுகளில் சேரத் தொடங்குகிறது. மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலி பிரச்சனை அதிகரிக்கும் போது யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த வீட்டில் சில வைத்தியங்களை செய்ய முடியும். அவை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த வீட்டு வைத்தியம்
நெல்லிக்காய்: யூரிக் அமிலத்திற்கு நெல்லிக்காய் ஒரு அருமருந்து. இதில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளன. இது யூரிக் அமில அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே காலையில் வெறும்வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை கற்றாழை சாற்றுடன் கலந்து குடித்தால் நன்மை தரும்.
ஓமம்: ஓமத்தை உட்கொள்வதன் மூலம், யூரிக் அமிலத்தின் அளவு படிப்படியாகக் குறையத் தொடங்கும். இதை இன்றாடம் நாம் சமைக்கும் போதும் பயன்படுத்தலாம் இல்லையெனில் இதை தண்ணீரில் ஊறவைத்த அவித்து கடிக்கலாம். உங்களுக்கு பிடித்த முறையில் இந்த ஓமத்தை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.
எலுமிச்சை நீர்: எலுமிச்சை நீர் குடிப்பது யூரிக் அமிலத்தை இல்லாமல் செய்யும். எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் காணப்படுகிறது. இது யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் அமில விளைவை தானாகவே உருவாக்குகிறது.
எனவே காலையில் எழுந்தவுடன், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையை பிழிந்து குடித்து வந்தால் இந்த யூரிக் அமிலம் குறைய தொடங்கும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுவதன் மூலம் இந்த நோயில் இருந்து விடுபடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |