புரூஸ் லீ மரணத்திற்கு பின் ஒளிந்து கிடந்த மர்மத்தின் வெளிச்சம்! ஆராய்ச்சின் முடிவு இதுவா?
தற்காப்பு கலையின் ஜாம்பவானாக விளங்கிய புரூஸ் லீ மரணம் தொடர்பான சில உண்மைகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
குங்ஃபூ தற்காப்பு கலையின் வித்துவான்
குங்ஃபூ தற்காப்பு கலையில் வித்துவானாக விளங்கிய புரூஸ் லீ தனது 32 வாது வயதில் அகால மரணமடைந்துள்ளார்.
இவரின் மரணம் குறித்து பலர் பல காரணங்களை கூறினாலும் அவை ஏற்றிக் கொள்ள முடியாதவையாகவே இன்று வரை காணப்படுகிறது.
இதன்படி, சீன கேங்ஸ்டர்களினால் படுகொலை செய்யப்பட்டடிருக்கலாம் எனவும் அவரின் காதலி விஷம் கொடுத்திருக்கலாம் எனவும் பொலிஸாரால் உகிக்கப்பட்டது.
image - @ TWITTER/1977WHITERIOT
அரிய வகை நோய்
ஆனால் ஆராய்ச்சிகளின்படி, இவர் Hyponatremia என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் தான் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
அதாவது, Hyponatremia எனப்படுவது சிறுநீரகத்திருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்ற இயலாமை ஏற்பட்டு பெருமூளையில் வீக்கம் ஏற்பட்டால் சில மணிநேரங்களில் மரணம் சம்பவிக்கும்.
இந்நோயால் பாதிக்கப்பட்டு தான் லீ உயிரிழந்துள்ளதாக அவர் பற்றிய புத்தகங்களின் கூற்றுக்களின் படி, ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.
மேலும் இதுவும் ஒரு ஊகிப்பே தவிற உண்மையான காரணம் புரூஸ் லீக்கு தான் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.